தொழில் (05) – கட்டை பை தயாரித்தல் (NON OVEN STICK BAG)
திட்ட மதிப்பிடு : 10 லட்சம் (2 லட்சம் நடைமுறை மூலதனம்)
தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.
பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
துணிக்கடைகளில் அதிகமாக துணி வாங்கும் போதும் மளிகை கடையில் பொருட்கள் வாங்கும் போதும் இந்த கட்டை பையில் போட்டு பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த நான்-ஓவன் கட்டை பை பிளாஸ்டிக் மற்றும் சணல் பைகளுக்கு மாற்றாக வந்துள்ளது. இந்த நான்-ஓவன் கட்டை பைகளை மறு உபயோகமாக அன்றாட பொருட்கள், துணிகளை எடுத்து செல்ல பயன்படுத்தலாம். இது எளிதில் கிழியாது. தரமாகவும் கடையின் பெயர், முகவரி மற்றும் அதன் விளம்பரம் இடம் பெற்றிருக்கும்.
சிறப்பம்சங்கள் :-- அனேக ஜவுளிக் கடைகளில் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது.
- ஒவ்வொரு பையும் தையல் இயந்திரத்தில் தரமான நூலினை கொண்டு தைப்பதால் வலிமையாக இருக்கும்.
- வாடிக்கையாளரின் தேவைக்கேற்ற டிசைனில் விளம்பரத்தை அச்சிட்டு தருவதற்கு இயந்திரங்கள் உள்ளது.
- இந்த அச்சு இயந்திரத்தில் நான்-ஓவன் பைகள் தவிர இதர சாதாரண அச்சு எந்திரமாகவும் உபயோகிக்கலாம்.
- இதன் தேவை அதிகம். நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.
- இந்த தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.
திட்ட மதிப்பிடு : 10 லட்சம் (2 லட்சம் நடைமுறை மூலதனம்)
அரசு மானியம் : 25-35% PMEGP Scheme / 25% NEEDS Scheme