Wednesday, March 7, 2018

தொழில் கடன் உதவி பெற தேவையான சான்றிதழ்கள்


வங்கி தொழில் கடன் உதவி பெற தேவையான சான்றிதழ்கள்:

                தொழில் தொடங்க கடன் உதவி கேட்கும் திட்ட அறிக்கையை ஒருவர் சமர்பித்ததும், அல்லது கடன் தேவையை தெரிவித்த பின்னர் வங்கி கள ஆய்வாளர்கள் மூலம், கடன் கேட்டு வருபவர் தொழில் தொடங்க இருக்கும் இடம் மற்றும் அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் உண்மைதானா? என்பது உறுதி செய்யப்படும்.

நபார்டு, மாவட்ட தொழில் மையம் ஆகியவை அந்தந்த மாவட்டங்களில் என்ன தொழில்கள் செய்தால் லாபகரமாக இருக்கும் என்பதையும், தொழில்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அட்டவணை வெளியிட்டு உள்ளனர். தொழில்கள் தொடங்குவதற்கு அவற்றைப் பொதுமக்கள் பயன்படித்திக் கொள்ளலாம்.

திட்ட அறிக்கை, வங்கி கள ஆய்வாளர்களின் அறிக்கை, கடன் கேட்பவருக்கு இது சரியான தொழில்தானா? என்பதை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்ட நபருக்கு கடன் வழங்கலாம் என்று பாங்கி மேலாளர் முடிவு செய்வார். பின்னர் கடன்பெற விரும்புவரை அழைத்து, கடன் பெறுவதற்காக, அணுகிய வங்கிகளின் அருகே உள்ள மற்ற வங்கிகளில் கடன் பெற விரும்புவரோ அல்லது அவரது உறவினர்களோ ஏற்கனவே கடன் பெற்று இருக்கிறார்களா? என்பதை உறுதி செய்யும் பொருட்டு மற்ற வங்கிகளில் கடனில்லைசான்றிதழ் (நோ டியூ சர்டிபிகேட்) பெற வேண்டும்.

பின்னர் கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அத்துடன் வங்கிக்கு தேவையான உரிய ஆவணங்களுடன் இணைத்து கொடுக்க வேண்டும். ஒரு சில கடன் திட்டங்களுக்கு கல்வி தகுதி மாறுபடும். கடன் திட்டங்களை பொறுத்து ஆவணங்கள் மாறுபடும்.

வங்கி தொழில் தொடங்க கடன் உதவி பெறுபவர் ஒவ்வொரு கடன் திட்டத்திற்கும் ஒருவர் தனது சொந்த முதலீடாக கடன் பெறும் தொகையில் இருந்து 15% முதல் 25 சதவீதம் பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இது வ்வொரு தொழிலுக்கு தகுந்தவாறும், வங்கி மேலாளரின் ஆலோசனை படியும் மாறுபடும்.


Related Searches


icici business loan interest rate
icici business loan emi calculator
icici business loan contact number
loans for small business without security
loan for business start up
how to get bank loan for business
icici bank business loan application form
business loan hdfc

No comments:

Post a Comment