Saturday, May 12, 2018

தொழில் (01) – டயர் ரீ-டிரேடிங் Tyre Re-Trading


புதிய தொழில் (03) – டயர் ரீ-டிரேடிங் (Tyre Re-Trading)

 தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
இன்றைய இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மிக அதிகம். இந்த வளர்ச்சி அடைய சரக்கு மற்றும் போக்குவரத்து மிக முக்கியமானது. இதில் குறைந்த பட்ச சரக்குகள் ஒரு இடத்தில் இருந்து நாட்டின் பல இடங்களுக்கு கொண்டு செல்வது கனரக வாகனங்கள். இந்த கனரக வாகனங்கள் இயங்க டயர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த டயர் பெரும்பாலும் ஒரு குறிப்பிட கிலோமீட்டர் வரை நல்ல நிலையில் ஓடும். பின்னர் தேய்மானம் அடைந்து விடும். புதியாக டயர் வாங்கி பொருத்தினால் அதிக செலவாகும். எனவே தேய்மானம் அடைந்த பழைய டயரினை மீண்டும் ரீ-டிரேடிங் முறையில் தேய்மானம் அடைந்த பகுதியை புதுப்பித்து  மீண்டும் பயன்படுத்தலாம்.

பெரும்பாலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கனகரக வாகனங்களின் டயர்களை மாற்ற வேண்டும் அல்லது ரீ-டிரேடிங் செய்து பயன்படுத்த வேண்டும். ஒரு டயரை மூன்று முறை ரீ-டிரேடிங் செய்து பயன்படுத்தலாம். ஒவ்வொரு நாளும் பெருகிவரும் வாகனங்களால் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ள தொழில்.

 சிறப்பம்சங்கள் :-
⦁ லாரிகள் மற்றும் பேருந்துகள் என அனைத்து வாகன டயர்களுக்கும் ரீ-டிரேடிங் செய்யலாம்.
⦁ புதிய டயர் வாங்கும் விலையை விட நான்கில் ஒரு பங்கு மிக குறைந்த விலையில் இருப்பதால் அனைவரும் இதனை தேர்வு செய்கின்றனர்.
⦁ நவீன இயந்திரங்களை கொண்டு தரமான முறையில் தயாரிப்பதால் இதன் தரமும், உறுதியும் அதிகம். இதில் 400 மற்றும் 1200 டயர்கள் தயாரிக்கும் வகையில் இயந்திரங்கள் உள்ளன.
⦁ நல்ல லாபகரமான தொழில் அனைத்து மூலப் பொருட்களும் எளிதில் கிடைக்கின்றன.
⦁ இந்த தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு :  40 லட்சம் + நடைமுறை மூலதனம் 26 லட்சம்

அரசு மானியம் :  25-35% PMEGP Scheme / 25% NEEDS Scheme

No comments:

Post a Comment