Saturday, May 12, 2018

தொழில் (02) –ஷாப்பிங் பேப்பர் பேக் Shopping Paper Bags


தொழில் (03) –ஷாப்பிங் பேப்பர் பேக் (Shopping Paper Bags) 

 தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
பிளாஸ்டிக் ஷாப்பிங் பையை உபயோகிப்பது சுற்றுப்புறசூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும். பல இடங்களில் அரசு பிளாஸ்டிக் பைகளை தடை செய்துள்ளதால் பேப்பர் பைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே பேப்பர் பேக்ஸ் ஷாப்பிங் கடைகளில் பயன்படுத்துவது சிறந்தது. தற்போது பேப்பர் பேக்ஸ் பல்வேறு வண்ணங்களில் தடிமனான பேப்பர்களில் தயாரித்து விற்பனை செய்தால் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும். விலையுயர்ந்த பொருட்களை இப்படி வண்ண பேப்பர் பைகளில் வைத்து கொடுப்பதை கடைகள் வாடிக்கையாக கொண்டுள்ளது. நல்ல உறுதியான பேப்பரில் பார்ப்பதற்க்கு அழகான டிசைனில் கைப்பிடியுடன் பைகள் வருவதால் மக்கள் இதனை எளிதாக பெற்று செல்வர்.

சிறப்பம்சங்கள் :-
⦁ ஓன்று அல்லது இரண்டு வண்ணங்களில் கடையின் பெயர் மற்றும் படங்களை அச்சிட்டு வழங்குவதால் கடைகளுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்.
⦁ இது பிளாஸ்டிக்கிற்கு மாற்றாகவும் சுற்றுப்புற சூழலை பாதிக்காமல் இருப்பதாலும் அரசும் இதற்கு ஆதரவு தருகிறது.
⦁ இயந்திரங்களை கொண்டு தரமான முறையில் தயாரிப்பதால் இதன் தரமும், உறுதியும் அதிகம். ஒரு நாளைக்கு 3000 பைகள் வரை தயாரிக்கலாம்.
⦁ நல்ல லாபகரமான தொழில் அனைத்து மூலப் பொருட்களும் எளிதில் கிடைக்கின்றன.
⦁ இந்த தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு: 05 லட்சம்

அரசு மானியம்: 25 UYEGP Scheme

1 comment: