Saturday, May 12, 2018

தொழில் (04) – ப்ளை ஆஸ் ப்ரிக்ஸ் Fly Ash Bricks

 தொழில் (04) – ப்ளை ஆஸ் ப்ரிக்ஸ் (Fly Ash Bricks) 

தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்
கட்டுமானத் துறையில் செங்கற்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தும் கற்கள் தான் இந்த ப்ளை ஆஸ் ப்ரிக்ஸ். செங்கற்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக கட்டுமானத் துறையில் ஒரு மாற்று தொழில்நுட்பமாக நிலக்கரி சாம்பலை கொண்டு தயாரிக்கப்பட்டும் இந்த வகை கற்கள் தான் இப்போது பரவலாக கட்டிடம் கட்ட பயன்படுத்த படுகிறது. ப்ளை ஆஸ் ப்ரிக்ஸ் நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு மற்றும் ஜிப்சம் கொண்டு தயாரிக்கப்படுவதால் மிகவும் வலிமையுடையதாக இருக்கும்.

சிறப்பம்சங்கள் :-
  • தற்போது மண்ணிலிருந்து செங்கல் தயாரிக்க அரசு பல்வேறு கட்டுபாடுகளையும், தடைகளையும் விதித்துள்ளதால் இந்த ப்ளை ஆஸ் ப்ரிக்ஸ் தயாரிப்பது எளிதானது.
  • கட்டுமானத்திற்கு எளிதானது.
  • வேலையாட்கள் குறைவு, இதில் வேஸ்டேஜ் குறைவு.
  • நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.
  • அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம். 

திட்ட மதிப்பிடு : 25 லட்சம் (2.00 லட்சம் நடைமுறை மூலதனம்)

அரசு மானியம் : 25% NEEDS Scheme / 25-35% PMEGP Scheme

No comments:

Post a Comment