Saturday, May 12, 2018

தொழில் (03) –ஆட்டோ பவர் லூம் Auto Power Loom

 தொழில் (2) –ஆட்டோ பவர் லூம் (Auto Power Loom)

 தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
ஆட்டோ பவர் லூம் என்பது நவீன முறையில் தறி நெய்வதாகும். இந்த தறிகள் தரமானதாகவும், மிக வேகமாகவும் துணிகள் நெய்யும் தன்மையுடையவை. இந்த வகை தறிகளில் சர்டிங் துணிகள், பேன்ட் துணிகள், தவல் துணிகள் என பலவகை துணிகள் தயாரிக்கலாம். இவை தானாகவே துணிகளை நெய்யும். இந்த வகை தறிகளில் 60 கவுண்ட் நூல்களைக் கொண்டு தயாரிக்கலாம். 50 முதல் 80 வரை பிக்ஸ் உள்ள தறிகள், இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 7 ½ மீட்டர் முதல் 9 மீட்டர் வரை துணி நெய்ய முடியும்.

சிறப்பம்சங்கள் :-
⦁ இந்த தறிகள் தொடர்ந்து ஓடக் கூடியது. இந்தியாவில் கிடைக்கும் தரமான தறியாகும்.
⦁ வெளிநாடுகளில் இருந்து செகனன்ட் தறியாக கூட வாங்கலாம்.
⦁ 320 முதல்  450 ஆர்பியம் வரை ஓடக் கூடிய தறிகள். பெரும்பாலான துணி நிறுவனங்கள் இந்த வகை தறியில் துணி தயாரித்து கொடுக்க ஆர்டர் கொடுப்பார்கள்.
⦁ அதிக தேவை இருப்பதால் நூல் மற்றும் தேவையான மூலப் பொருட்களை துணி நிறுவனமே வழங்கும்.
⦁ ஆர்டரின் பேரில் தேவைக்கும், தரத்திற்கும் ஏற்ற முறையில் தயாரித்து கொடுக்கலாம். நல்ல லாபம் தரும் தொழில்.
⦁ இந்த தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம். \

திட்ட மதிப்பிடு:  100 லட்சம்

அரசு மானியம்:   25% NEEDS Scheme

No comments:

Post a Comment