தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசு மூலம் செயல்படுத்தப்படும் கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன மற்றும் நேரடிக்கடன் ஒவ்வொரு நிதி ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாக வழங்க அரசு குறியீடு நிர்ணயித்து உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வரவு செலவு பொறுத்து இந்த குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.
கதர் கிராம தொழில் வாரியம், தாட்கோ, மாவட்ட தொழில் மையம், நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்ற பல்வேறு நிறுவனங்கள் மூலம் வங்கிகளில் கடன் பெற்று தொழில் தொடங்கலாம். இல்லையென்றால் வங்கி மேலாளரை நேரடியாக தொடர்பு கொண்டும் தாங்கள் செய்ய விரும்பும் தொழில் குறித்து சரியான விளக்கங்களை தெரிவித்தும் கடன் பெறலாம்.
வங்கி மேலாளரை நேரடியாக சந்தித்து கடன்பெற விரும்புபவர்கள், தாங்கள் தொடங்க இருக்கும் தொழில் பற்றிய விளக்கங்களை திட்ட அறிக்கையாக தயாரிக்க வேண்டும். திட்ட அறிக்கையில் எவ்வளவு தொகை கடனாக வேண்டும், தொழில் தொடங்குவதற்கான மூலப்பொருள்கள் வாங்குவதற்கு எவ்வளவு செலவாகும், வாங்கும் கடனை தொழிலுக்காக எவ்வாறு முதலீடு செய்யப்போகிறீர்கள். அதில் செலவு போக தங்களுக்கு கிடைக்கும் லாப விவரம் குறித்து தெரிவிக்க வேண்டும்.
கடன்பெற விரும்புபவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதி அல்லது தொழில் தொடங்க உள்ள பகுதி அருகில் உள்ள வங்கியில்தான் கடன் பெறுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. அவ்வாறு அருகே உள்ள வங்கியின் மேலாளரை சந்தித்து தொழில் தொடங்கும் விவரத்தை தெரிவிக்க வேண்டும். அப்போது வங்கி மேலாளர் திட்ட விவரங்கள் கேட்பார். தொழில் தொடங்க போகிறார் என்ற விவரம் ஆகியவற்றை பார்த்து தேவைப்பட்டால், அவ்வித்தை பார்வையிட்டும் வங்கி மேலாளர் கடன் கொடுப்பது பற்றி முடிவு செய்யலாம்.
தாங்களாகவே திட்ட அறிக்கை தயார் செய்ய முடியாதவர்கள் மாவட்ட தொழில் மையம், பேட்டை சிறுதொழில் சேவை மையம் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ள மாதிரி திட்ட அறிக்கையை பார்த்து திட்ட அறிக்கை தயார் செய்து கொள்ளலாம்.
Related Searches
how to get business loan in india
business loan requirements
loan for business without security
loan for business start up
business loan hdfc
loan for business in sbi
how to get a loan to start a business from the government
small business loan
No comments:
Post a Comment