Ads Here

Friday, May 11, 2018

Ladies Tailoring Shop

தொழில் (01)பெண்கள் தையலகம் (Ladies Tailoring Shop)

சி.ஆர் பிசினஸ் சொலுசன்ஸ் – தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.
பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் தங்களுடைய உடைகளை அவர்களுக்கு பொருந்தும் வகையில் நவநாகரீகமான உடைகளை உடுத்துகின்றனர். பெரும்பாலும் விழாக் காலங்கள், திருமணம் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் விதவிதமான புதிய வகை உடைகளை உடுத்த ஆரம்பித்து உள்ளனர். கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மகளிரும் இன்று நவநாகரீக உடைகளையே தேர்வு செய்கின்றனர். நமது நாட்டு மங்கையரின் முக்கிய உடை சேலை மற்றும் சுடிதார். சேலையின் நிறத்திற்கு ஏற்ற ஜாக்கெட் அணிவது சிறப்பாக இருக்கும்  இதையே பெண்கள் விரும்புகின்றனர். எனவே ஜாக்கெட் பல்வேறு டிசைனில் விருப்பத்திற்கு ஏற்ப எம்பிராய்டு செய்து தைத்து உடுத்த ஆர்வமுடன் இருகின்றனர். இதனை சிறந்த முறையில் பெண்கள் தையலகம் செய்து தருகிறது.

சிறப்பம்சங்கள் :-
⦁ பெண்கள் தங்களுக்கு தேவையான சுடிதார், ஜாக்கெட் போன்ற ஆடைகளை சரியான அளவில் பிரத்யேகமாக தைத்து உடுத்துவது வழக்கம். இதற்கு தையலகம் உதவுகிறது.
⦁ பெண்கள் தையலகம் பெண்களால் நடத்தப்படுவது மிக அவசியம். நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதால் தையல் தரமாக இருக்கும்.
⦁ பெண்களின் விருப்பத்திற்கேற்ப தேவையான டிசைனில் சிறந்த முறையில் சரியான அளவில் தயாரித்து கொடுக்கலாம். நல்ல லாபம் தரும் தொழில்.
⦁ இந்த தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு: 3.00 லட்சம்

அரசு மானியம்: 25% UYEGP & 25-35% PMEGP Scheme
a

No comments:

Post a Comment