Sunday, March 4, 2018

பாரதப் பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டம்


பாரதப்பிரதமரின் சுயவேலைவாய்ப்பு திட்டப்படிகடன் பெறுதல்- Buiness Loan

படித்தஇளைஞர்களை சுயமாகத் தொழில் தொடங்க இந்ததிட்ட்த்தின் கீழ் மானியத்துடன் கடன்வழங்கப்படுகிறது. இந்தத் திட்ட்த்தின் படி, உற்ப்பத்தி மற்றும் சேவை சார்ந்ததொழிலுக்கு அதிக பட்சமாக 2 லட்சம்ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. டெலிபோன் பூத் அமைத்தல், ஆட்டோவாங்குதல், ஜெராக்ஸ் கடை வைத்தல் போன்றவை, சேவை சார்ந்த தொழில்கள் ஆகும். வியாபார தொழிலுக்கு, அதிக பட்சமாக 1 லட்சருபாய் வரை கடன் வழங்கப்படுகிறது

இந்த்த்திட்டம் 1993 ஆம் ஆண்டு முதல்செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்ட்த்தின் கீழ்கடன் பெற விரும்புவோர்களின் வயது18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.8 ஆம்வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பெண்கள், உடல் ஊனமுற்றோர், முன்னாள்ராணுவ  வீரர்கள்ஆகியோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதற்கானவிண்ணப்பங்கள் மாவட்ட தொழில் மையத்தில்கிடைக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தொழில் மையத்தில்கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலனை செய்து தொழில் தொடங்கவிரும்புவரை நேர்முகத்தேர்வுக்கு அழைப்பார்கள். நேர்முகத்தேர்வுக் குழுவில் மாவட்ட்த் தொழில் மைய அதிகாரிகள்,தாட்கோ அதிகாரிகள், மாவட்டவேலை வாய்ப்பு அதிகாரி ஆகியோர் இருப்பர், இந்தக் குழுவினர், தொழில் தொடங்க விரும்புபவரிடம்,தொழில் தொடங்குவது சம்பந்தமானபல்வேறு கேள்விகளைக் கேட்பார்கள், தொழில் தொடங்குவதற்கான தகுதியும், ஆர்வமும் இருக்கும் நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குரிய விண்ணப்பங்களை விண்ணப்பதாரரின் அருகில் உள்ள வங்கிகளுக்குதொழில் மைய பொது மேலாளர்அனுப்பி வைப்பார்.

தொழில் கடன் உதவிகள் 

இந்தியாவில்இன்றைய கால கட்ட்த்தில் , தேசியமயமாக ஆக்கப்பட்ட தேசிய வங்கிகள், நாட்டின்பொருளாதார வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் அரும் பணிகள் ஆற்றிவருகின்றன. தொழில் வளம் பெருகவும்,வேளாண்மை வளம் பெருகவும், பொருளாதாரத்தில்நலிவுற்ற மக்கள் சுய தொழில்கள்செய்து கொள்ளவும் தேவையான நிதி உதவிகள்அனைத்தையும் சீரிய முறையில் தந்துதவி, மக்களுக்கு நன்மைகள் பலவற்றையும் நல்கி வருகின்றன. இதுமட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்திலும் இயங்கிவரும் அரசு நிதியுதவி நிறுவனங்கள்,பல்வேறு  சிறுதொழில்கள் அமைவதற்கான கடன்கள் மற்றும் முன்பணங்கள்ஆகியவற்றை வழங்கி வேலையற்றோருக்கு வேலைவாய்ப்புக்களை உண்டாக்கி வருகினறன.

அந்தவகையில், நாட்டின் பிரதமரின் 20 அம்சத் திட்டங்கள் மூலமாகஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டங்கள்பல மாவட்டங்களில் செயலாக்கம் பெற்று வருகின்றன. பாரதஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, தமிழ்நாடு ஒன்றியங்களின்பரிந்துரைகள் மூலமாகப் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களூக்குக கடனுதவிகளை நல்கி, அவர்கள் வாழ்க்கைக்குவகை செய்கின்ற திட்டங்கள் பலவற்றை அமல்படுத்துகின்றன.
மாவட்டத்தொழில் மையங்கள், மற்றும் இதர நிதிநிறுவன்ங்கள் மூலமாகத் தமிழக அரசு, பல்வேறுசிறு தொழில்கள் ஆரம்பித்து நட்த்துவதற்கான நிதியுதவிகளை மக்களுக்கு வழங்க, சிறு தொழில்கள்மேம்பாட்டிற்காக அருமையான பணிகளைப் புரிந்து வருகின்றது.

தொழில்முனைவோருக்குத் தேவைப்படும் அனைத்து வகையான உதவிகளையும், ஒரே கூரையின் கீழ் வழங்கும் நிறுவன்ங்களாக, நாடு முழுவதும் மாவட்டத் தொழில் மையங்கள் செயல்பட்டுவருகின்றன.

மாவட்டத்தொழில் மையம், ஒரு தொழில்முனைபவரின் உள்ளத்தில் தொழில் தொடங்கும் எண்ணம்உதயமானது முதல், அவர் தொழிலைநிறுவி நடத்தும் வரை துணை நின்று, உதவும் நோக்குடன் ஆற்றிவ்ரும் பணிகள் பல.

No comments:

Post a Comment