Sunday, March 4, 2018

தொழில் முனைவோருக்கு உதவும் இதர நிறுவனங்கள்


தொழில்முனைவோருக்கு உதவும் இதர நிறுவனங்கள்( Organizations Helpful for Eunterprenuers)

1)தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் , (டிஐஐசி) 27 ஒயிட்ஸ் ரோடு, சென்னை – 600014, போன் : 24331485
தொழிற்சாலைஅமைக்க நிலம், கட்டடம், இயந்திரங்கள்ஆகியவை வாங்க தமிழ்நாடு தொழில்முதலிட்டுக் கழகம் சுலபமான நிபந்தனைகளின்பேரில் நீண்ட கால, மத்தியகாலக் கடன்களை வழங்குகிறது. உலகவங்கி கடனுதவித் திட்ட்த்தின் கீழ், இயந்திரங்களை அயல்நாடுகளிலிருந்துஇறக்குமதி செய்ய, தொழில் நுட்பஉதவி ஆகியவற்றிற்கும் கடன்கள் பெறலாம். சிறியதொழில்களுக்குக் கடன்  தொடங்குவோர், மின்சார உற்பத்தி இயந்திரங்கள் வாங்க விரும்புவோர்,போக்குவரத்துபேருந்து நட்த்துபவர்கள், கிராமங்களில் வைத்தியத் தொழில் செய்யும் மருத்துவர்கள்ஆகியோருக்கு உதவ, தனித்திட்டங்கள் பலஉள்ளன.

2)தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (SIDCO)     கத்திப்பாரா முனை, சென்னை – 600 016.
                                சிறுதொழில் தொடங்குபவர்களுக்குப் பெருமளவில் உதவி புரிகிறது சிட்கோநிறுவனம். தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களை வாங்கிவினியோகிப்பது.மற்றும் தவணை முறையில்தொழிற்கூடங்களைக் கட்டிக் கொடுப்பது, உற்பத்தில்பொருள்களை ஏற்றுமதி செய்து வியாபாரங்கள் நடத்தஉதவி செய்வது, ஆகியவை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளசிறப்பான பணிகளாகும்.

3)சிறுதொழில்சேவை நிலையம்( Small Industries Service Institute),65-1,  ஜி.எஸ் டி ரோடு, சென்னை – 600 032.

                சிறுதொழிலுக்குஉதவி அளிக்க மைய அரசு, தொழில் வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ், சிறுதொழில் வளர்ச்சிக்குத்தனது விரிவாக்கப் பணியை அனைத்து வ்ழிகளிலும்சங்கிலித் தொடர்போல் செய்து வருகின்றது. புதியதொழிலைத் தேர்ந்தெடுத்து தொழில் சம்பந்தம்மான  அனைத்து விவரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இது ஆயத்த  நிலையில் உள்ள் மாதிரி திட்டங்களையும்வழங்குகிறது. தொழில் நுட்பம், இயந்திரம், மூலப்பொருள்கள் இவைகளைப் பற்றிய அனைத்து விவரங்களையும்தருகின்றது. நிர்வாகத் தொழில் நுட்ப அறிவுறைகள்வழங்குகிறது. நவீன இயந்திரங்களைப் பயன்படுத்த, அதன் செயல் முறையை விளக்குகிறது. அத்துடன் நடமாடும் செயல்முறை விளக்க ஊர்திகளின் மூலம், கிராமப்புறப் பகுதிகளில் புதிய தொழில் முனைவோரைஉருவாக்குகின்றது.
                மூலப் பொருள்களின் முழுஉபயோகம் பற்றி பரிசோதனை செய்து, அதன் பலனை சிறுதொழில்களுக்கு நல்குகிறது. சிறு தொழில்களை அரசாங்கப் பண்டக சாலையில் வாங்கும்இயக்கத்தில் ஊக்குவிக்கிறது. தொழில் மையங்கள் நிறுவதேவையான புள்ளி விவரங்களைச் சேகரித்துஅளிக்கிறது. சிறு தொழில் சம்பந்தமானமுக்கியமான விவரங்களைச் சேகரிக்கிறது. புதிய உற்பத்திப் பொருள்களுக்குள்ளவாய்ப்பு, சந்தை நிலவரம் ஆகியவற்றைஅறிந்து கூறுகிறது. சிறுதொழில் அமைப்போர்க்கு தொழில் நிர்வாகப் பயிற்சிஅளிக்கிறது.

4)தேசிய சிறு தொழில் நிறுவனம் ( என்.என்..சி),165, அண்ணாசாலை, சென்னை – 600 006.
                மைய அரசின் பார்வையின்கீழ் 1985 பிப்ரவரியில் தேசிய சிறுதொழில் நிறுவனம்தொடங்கப்பட்ட்து. இந்நிறுவனம், சிறுதொழில் வளர்ச்சிகுப் பெரிய அளவில் உதவுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள், மற்றும் உள்நாட்டு இயந்திரங்களைஇக்கழகம் சுலப தவணையில் சிறுதொழில்முனைவோர்க்கு அளிக்கிறது. அதனுடைய பயிற்சி நிலையங்களில், ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. அதனுடையவிற்பனைத்துறையில் ஏற்றுமதிப் பிரிவில், இந்திய சிறுதொழில்களில் உற்பத்தியாகும்தகுதி வாய்ந்த பொருள்களை மேலைநாட்டுலுள்ள நுகர்வோர்க்கு அறிமுகப்படுத்துகிறது.
               
5)தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் ,(SIPCOT, State Industries Promotion Corporation of Tamilnadu),19.ருக்மணி லட்சுமிபதி சாலை,எழுப்பூர்,சென்னை – 600008,போன்: 28554479

மாநிலத்தில்பரவலாகத் தொழில் வளர்ச்சியை முன்னேறச்செய்வதும், பின் தங்கியுள்ள பகுதிகள்தொழில் வளமடைய சிறப்பான வச்திகளைஅளித்தலும் சிப்காட்டின் குறிக்கோளாகும்.
                இந்நிறுவனத்தின் முன்னேற்ற நடவடிக்கைகளாவன
தொழில்வளர்ச்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களை மேம்படுத்தி, தொழில்நட்த்த்த்  தேவையானவசதிகளை ஏற்படுத்தி, சுலப தவணை முறையில்நிலப்பகுதிகளை வழங்குகிறது. தொழில் வளர்ச்சிக்காக சிலஇடங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைச் சீர்திருத்தி, சாலை, மின்சாரம், தண்ணீர்மற்றும் வடிகால், குடிநீர் வசதிகள் முதலியவற்றை நிறைவேற்றி, தொழில் முனைவோர்க்குத் தக்க வசதிகளுடன் நிலம்வழங்கும் திட்ட்த்தை, சிப்காட் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

6)தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் மையம் (I.I.C),  டி.என்.கே.ஹவுஸ், 49, அண்ணாசாலை,  சென்னை – 600 002.
                இந்திய முதலீட்டு மையத்தின்ஆதரவில் இந்த வழி காட்டும்மையம், சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம்,தொழில் தொடங்க, ஒத்துழைப்பு, மற்றும் கூட்டு முயற்சிகள் ஆகியவற்றில்உதவுதல், போன்ற முக்கிய பணிகளைஆற்றுகிறது.

7)டி.ஜி.டீ.டி (D.G.T.D) மண்டல அலுவலகம் ,எல். மாளிகை, 735 அண்ணாசாலை, சென்னை – 600 002.
இந்நிறுவனம், நடுத்தர மற்றும் பெரிய தொழில்களைப்பதிவு செய்தல், இயந்திர இறக்குமதிக்கான அனுமதிபெறுவதில் உதவுதல், கச்சாப்பொருள்களின் இறக்குமதிக்கான உரிம்ம் பெறுவதில் உதவுதல்,போன்ற பணிகளைச் செய்துவருகிறது



Organizations Helpful for Entrepreneurs)

No comments:

Post a Comment